தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைவ ருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், கிராமப்புற நூலகர் உள்ளிட்ட பணிகளில் தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றியவர்களுக்கு மிகக்குறைந்த அளவே ஒய்வூதியம் வழங்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் எம்.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலாளர் என்.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் எம்.முத்தையா மற்றும் நிர்வாகிகள் பி.மணிவண்ணன், அ.மணவாளன், இ.முத்து, தேவதாஸ், சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.