Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

சுதந்திர தினம்..புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை

ஆகஸ்ட் 15 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமசபைக்கூட்டம்

சுதந்திர தினமான 15.08.2023-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்இ கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கைஇ தூய்மையான குடிநீர் விநியோகத் தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்.

 அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா   தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டங்கள்..

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top