புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று (15.08.2023) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை யினை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதா ரர்களை பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமாதா னத்தை குறிக்கும் வகையில் சமாதான வெள்ளை புறாக்க ளையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்.
இவ்விழாவின்போது, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.62,75,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேலைவாய்ப்புத்துறை . இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 499 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அரசு இசைப்பள்ளி, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராஜாளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மாமல்லன் சிலம்ப பயிற்சி பாசறை
ஆகிய பள்ளிகளின் சார்பில், 667 மாணவ, மாணவிகளின், வரவேற்பு நடனம், பெண் முன்னேற்றம், உலக அமைதி, பெண் கல்வி, புரட்சி பெண்கள், சமுதாயத்தில் பெண்கள் வளர்ச்சி, தேசப்பற்று மற்றும் சிலம்பாட்டம் ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.