Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் சுதந்திரதின விழா கோலாகலம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா

ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியிலே நடைபெற்ர சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்று கொடியேற்றி வைத்தார்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் .மேல் நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப்பாடல்கள் பாடி னார்கள். மூவர்ணக் கொடி தன் வரலாறு கூறுவதுபோல கவிதை வாசித்தனர். தமிழில் பேசிய தாரிகா என்ற மாணவி இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கின்ற முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்லுங் கள் என  கேட்டுக் கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

சுதந்திரதினவிழிப்புணர்வுபாடல்களுக்கானநடனம்காண்போரைக்கவர்ந்தன. சிறப்புவிருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா பேசும்போது, இந்தபள்ளி விழாவில் முழுவதும் மாணவர்களே ஒருங்கிணைத்து விழாவை நடத்து கிறார்கள் என்று சொன்னார்கள். நானும் கவனித்திருக் கிறேன். எங்கு நடக்கின்ற விழாவாக இருந்தாலும்; வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பள்ளிநிர்வாகத்தைப் பாராட்டுகின்றேன்.

இங்கேஎங்களைப்போன்றவர்களைஅழைத்து பேசவைப்பதன் நோக்கம் மாணவர்கள் நீங்கள்உழைப்பால் உயர்ந்து சமூகத்தில் பெரிய மனிதர்களாக விளங்க வேண்டும். உழைப்பால் உயர்ந்தவர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டார்.  நிகழ்ச்சியில்ஆகஸ்ட் 15 -ஆம் தேதி பிறந்த மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது.

பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளை சிறப்பு விருந்தினர் ராஜகுமாரி முத்துராஜா வழங்கினார். பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக பள்ளியின்ஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி வரவேற்றார். ஒன்பதாம்வகுப்பு மாணவன்கௌதம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார்,  அண்ணாமலை, கல்வித்துறை வெங்கட கிருஷ்ணன்,  கல்வியாளர்கள் மகாத்மா ரவிச்சந்திரன், துரைமணி,

பள்ளியின் ஒருங்கிணைப் பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி பிள்ளை, மற்றும் மேலாளர்ராஜா ஆசிரியர்கள் காசாவயல்கண்ணன், உதயகுமார், ராமன், நீலகண்டன், ஆனந்தி, சுமதி, விசாலி மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் அ.அட்சயாஸ்ரீ, நிகிதாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top