Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம்: ரூ. 5 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை

திருவொற்றியூர் மண்டல கூட்டம்

திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம்:  ரூ. 5 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 5 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல வார்டுக் குழு மாதாந்திரச் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கழிப்பிடம், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,

சாலைகள் பராமரிப்பு, அங்கன்வாடி கட்டடங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் அடங்கிய 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் திருவொற்றியூர் மயான எரிவாயு தகனமேடை பராமரிப்பதற்கான ஒராண்டு செலவினம் ரூ.22.48 லட்சம், சாலைகளை பராமரிக்க தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 47 கூடுதல் பணியாளர் நியமிக்கவும்,

அவர்களது ஊதியத்திற்காக ரூ. 89.55 லட்சம் ஒதுக்கீடு, 4-வது வார்டுக்கு உள்பட்ட மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.

கூட்டத்தில் மண்டல அலுவலர் நவேந்திரன், மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் லீனா, செயற்பொறியாளர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top