புதுக்கோட்டை மாவட்டம் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதி மொழியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் (18.08.2023) அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் நாள் ‘நல்லிணக்க நாளாக” அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வருகின்ற 20.08.2023 அன்று விடுமுறை தினம் என்பதால், இன்றைய தினம் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நல்லிணக்க நாள் உறுதிமொழியான, ‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.
மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடு களையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியினை, ஆட்சியர் வாசித்தார். அதனை பின்தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழியை வாசித்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீகாந்த், மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் (நீதியியல்)செந்தில்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.