தஞ்சாவூர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் குயில் கூட்டம் சார்பில் இடதுசாரி சிந்தனையாளர், தமிழ் தேச பற்றாளர், ஈழ விடுதலை ஆதரவாளர், சமூக செயற்பாட்டாளர் வைகறை வாணன் அகவை 74, வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா . நிகழ்ச்சிக்கு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
முனைவர். கம்பன் கனகசபை, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் இரா.குணசேகரன், விவேகானந்தன், செல்ல கலைவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மலரை அறிமுகம் செய்து முனைவர்கள் கு. திருமாறன் , மு.இளமுருகன், பா.மதிவாணன் ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்றினார்கள். மேற்கு மலேசியாவில் வகுப்பு ,இனம் மற்றும் காலனித்துவம் என்ற ஆங்கில நூலை முனைவர் இரா. சுப்பிரமணி அறிமுகம் செய்து உரையாற்றினார்.
நிகழ்வினை முனைவர் வி.பாரி தொகுத்து வழங்கினார். முன்னதாக பொறியாளர் ஜான் கென்னடி வரவேற்றார். முடிவில் புலவர் கரு.அரங்கராசன் நன்றி கூறினார்.
கூட்டத்தை குயில் கூட்ட நிர்வாகிகள் பழ. குணசேகரன், பா.செல்வபாண்டியன், ச.வீரமணி,நா குருசாமி, இயக்குனர் ஆனந்தசிவா, கோபாலன் குணசேகரன், இரா.திரவியம், மன்னைமறவன், தொலைதொடர்புத் துறை சேகர், அரங்க மருதநம்பி, இரமணி பாலாஜி, கீதா, கோ. இந்திராதேவி, யாழ் மொழிச்செல்வன், இரா.அருள்மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் இடதுசாரி கொள்கையை, தமிழ் தேசிய நிலைப் பாட்டை, ஈழ ஆதரவு செயல்பாட்டு தளங்களில் முன் நின்று போராடி வந்தவர், இலக்கிய ஆர்வலர், தனித்தமிழ் பற்றாளர், திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்பு படித்திருந்தாலும் பணிக்கு செல்லாது சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் இடதுசாரி கொள்கையுடன், தமிழ் தேசிய நிலைப்பாட்டையும் வலியுறுத்தி வந்தவர்.
இத்துடன் இல்லாமல் எழுத்தாளர், இலக்கியவாதி, பதிப்பாளர் என்ற பல்வேறு தளங்களில் முன் நின்று செயலாற்றி வரும் புலவர் வைகறைவாணன் வாழ்க்கை வரலாறு என்பது இன்றைய பாசிச இந்துத்துவா கருத்தியலை எதிர் கொண்டு வெற்றி பெறவும், சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் இளைய தலைமுறை அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டியது அவசியம் என்று வைகறைவாணன் வாழ்க்கைப் படிப்பினை மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.