Close
நவம்பர் 22, 2024 4:10 மணி

புத்தகம் அறிவோம்… உலகம் சுற்றும் தமிழன்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம். உலகம் சுற்றும் தமிழன்

ஜப்பானில் ஓவ்னா என்னும் சிறிய ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன். முன்பின் அறியாத இரண்டு ஜப்பானிய வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களில் ஒருவன் என் கையைப் பிடித்து குலுக்கி “நீங்கள் காந்தியின் நாட்டில் இருந்து வந்தவர்தானே” என்றான்.”ஆம்” என தலையசைத்தேன்.”

உலகத்தில் காந்தியடிகள் போன்ற மனிதர் கிடையாது. ஜப்பானில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். சக்கரவர்த்திகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் காந்தியடிகள் போன்ற சிறந்த மனிதர்கள் பிறந்ததேயில்லை.” என்றான். சக்கரவர்த்தியையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடும் ஜப்பானியர்கள் காந்தியடிகளைப் பாராட்டுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.” பக்.9.

ஏ.கே.செட்டியார் உலகம் சுற்றிய தமிழர். மகாத்மா காந்தியைப் பற்றி முதன்முதலில் ஆவணப்படம் எடுத்தவர். இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் உலகம் முழுவதும் சுற்றி, தான் பார்த்த தேசங்களைப் பற்றி எழுதியவர்.

குறிப்பாக காந்தி ஆவணப்படம் எடுக்க காந்தி பயணித்த நாடுகளுக்கெல்லாம் சென்றுவந்தவர். காந்தி அறியாமலேயே அவருடைய படங்களை எடுத்து ஆவணப்படுத்தியவர். ‘பயண இலக்கியத்தின் முன்னோடி’ ஏ.கே.செட்டியார்.

அவர் அவ்வப்போது தனது பயண அனுபவங்களை பல்வேறு பத்திரிக்கைகளில் பயணக்கட்டுரைகளாக எழுதியதை 1940 ல் சக்தி காரியாலயம்’ உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலாக வெளியிட்டது. அந்த நூலை ‘சந்தியா பதிப்பகம்’ புதுக்கோட்டை ‘ஞானாலயா’ நூலகத்திலிருந்து பெற்று 2013 -ல் இந்த நூல் மறுபதிப்பை செய்துள்ளது.

இந்த நூலில் 13 கட்டுரைகள் உள்ளது. முதல் கட்டுரையான ‘உலகெங்கும் ஒலிக்கும் பெயரில்’தான் முதல் பத்தியில் உள்ள காந்தியைப் பற்றிய செய்தி உள்ளது.

‘உலகம் சுற்றும் தமிழன்’ தமிழில் வெளிவந்த பயண நூல்களில் ஒரு முன்னோடி நூல் மட்டுமல்ல உலக வரலாற்றை, எளிய மொழியில் எடுத்துரைக்கும் வித்தியாசமான நூல் என்று பதிப்பகத்தார் எழுதுகின்றனர்.இதில் உள்ள கட்டுரைகள் யாவும் 1937-1940 -க்குள் எழுதப்பட்டது. வெளியீடு-சந்தியா பதிப்பகம்,044-24896979.

#வாசகர் பேரவை விஸ்வநாதன்-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top