Close
நவம்பர் 22, 2024 3:04 காலை

ஈரோட்டில் ஒண்டிவீரன் நினைவு நாள்… அதிமுக சார்பில் மரியாதை

ஈரோடு

விடுதலைப்போராட்ட வீரர் ஓண்டி வீரன் உருவப்படத்துக்கு அதிமுக சார்பில் பெரியார் நகர் மனோகரன் தலைமையில் மரியாதை செய்த நிர்வாகிகள்

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன்  நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு  ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக  செயலாளர் இரா.மனோகரன்  தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டும்சேவல் கிராமத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன், தனது வீரத்தால் ஆங்கிலேயரை நிலைகுலையச் செய்தார். 1755-ஆம் ஆண்டு நெல்லை சீமையில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற போரில், ஆக்ரோஷமாக போரிட்டு, பல வெற்றிகளை ஒண்டிவீரன் குவித்தார்.

இறுதியில், கடந்த 1771-ம் ஆண்டு மானூரில், ஆங்கிலேயர் களுடன் நடைபெற்ற போரில் ஒண்டிவீரன் வீர மரணம் அடைந்தார். ஆங்கிலேயருடன் நடந்த போரில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை- பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தன்று, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் உருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top