Close
நவம்பர் 22, 2024 9:44 காலை

தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அரசுச்செயலர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை அருகே கல்லு குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப்சிங்பேடி.,  மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண் டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவ மனை, கல்லு குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றை  அரசு முதன்மை செயலாளர் ககன் தீப்சிங்பேடி.,  மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அரசுமுதன்மைசெயலாளர் ககன் தீப் சிங் பேடி.,  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், ஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவமனை, கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி தாய் சேய் நலகண்காணிப்புமையம் ஆகியபல்வேறு இடங்கள் ஆய்வுசெய்யப்பட்டது.

இந்தஆய்வில் மருத்துவமனையில் அமையப்பட்டுள்ள அடிப்படைவசதிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. புற நோயாளிகள் சீட்டுகொடுக்கும்  இடம்,தொற்றுநோய் பிரிவு, ஆய்வகம், மருந்துகிடங்கு, அவசரசிகிச்சைபகுதி, கண் சிகிச்சை மையம், சமையலறை, நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம்,நோயாளிகள் அறை, பிரசவ அறை போன்ற பல்வேறு வசதிகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் அணுகுமுறைகள் பற்றி ஆய்வுசெய்யப்பட்டது.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி தாய் சேய் நல கண் காணிப்பு மையத்தில் மகப்பேறு கால உயர் ரத்தஅழுத்தம் ,சர்க்கரை நோய்,ரத்தசோகை, தைராய்டு உள்ளிட்ட அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளின் தொடர் சிகிச்சை உறுதிசெய்தல், தாய் சேய் நலகுறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பிறப்புசான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குதல்,மேற்சிகிச்சைக்கான பரிந்துரைகளை உறுதி செய்தல் போன்றதாய் சேய் நலகண்காணிப்பு மைய பல்வேறு செயல்பாடுகள் இந்தஆய்வில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, 300 படுக்கை வசதிகள் கொண்டநோயாளிகள் அறை, அவசரசிகிச்சை மையம் போன்ற பல்வேறு வசதிகள் மற்றும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் கலந்துரை யாடினோம்.

மேலும் இந்தஆய்வின் மூலம் மருத்துவமனையில் மேம்படுத் தப்பட வேண்டிய வசதிகள் குறித்து மேற்கொள்ளப் பட்டுள் ளது.என்றும் அரசுமுதன்மைசெயலாளர் ககன் தீப் சிங் பேடி  தெரிவித்தார்.
இந்தஆய்வின்போது, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்  ஆர்.பாலாஜி நாதன் ,மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ச. இராமசாமி, மாநகராட்சி ஆணையர் த. சரவணக்குமார் , மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மரு. திலகம் , துணை இயக்குனர் மரு. பா.கலைவாணி , மாநகராட்சி நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி மற்றும் அரசு மருத்துவர்கள்,செவிலியர்கள், அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top