புதுக்கோட்டை மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட்ட, அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டி புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (24.08.2023) பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த போட்டியில் 19 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி மிருதுபாஷினி முதல் பரிசும் மற்றும் தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி ப.நிலோபர் நிஷா இரண்டாம் பரிசும் மற்றும் வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6-ஆம் வகுப்பு மாணவி கிபு.லெட்சுமி பிரியா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ.) தி.பக்கிரிசாமி, வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு) சா.விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.