Close
நவம்பர் 22, 2024 1:45 மணி

பங்குதாரர்களுக்கு 270% ஈவுத் தொகை வழங்க மணலி சி.பி.சி.எல் நிறுவனம்முடிவு

சென்னை

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.)

சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தனது பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டில் 270 சதவீதம் ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது.

இது குறித்து சி.பி.சி.எல். நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட வருடாந்திர பொதுக் கூட்டம் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஒரு பங்குக்கு ஈவுத் தொகையாக தலா ரூ. 27 வீதம் வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு பங்கு தொடக்கத்தில் ரூ.10-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கணக்கில் கொள்ளும்போது இந்த ஈவுத் தொகை 270 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் ஒட்டு மொத்த வருவாயாக ரூ. 90,801 கோடி ஈட்டியுள்ள நிலையில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.4,808 கோடியும், வரிக்கு பிந்தைய நிகர லாபமாக ரூ. 3,534 கோடியும் ஈட்டியுள்ளது.

மேலும் ஓராண்டில் ஒட்டுமொத்தமாக 11.3 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்த ஆலை சுத்திகரிப்பு செய்துள்ளது. இது தனது முழு கொள்ளளவு திறனில் 108 சதவீதம் ஆகும்.  ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் முந்தைய சாதனைகள் அனைத்தையும் கடந்து சாதனை படைத்துள்ளது.

இக்கூட்டத்தில் சி.பி.சி.எல். மேலாண்மை இயக்குனர் அரவிந்த குமார், இயக்குநர்கள் எச்.சங்கர் (தொழில்நுட்பம்), ரோகித் குமார் அக்ரவாலா (நிதி), பி.கண்ணன் (இயக்குதல்) மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top