Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுக்களை ஒழிக்க முடியாது

சென்னை

மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன்

பொதுமக்களின் ஒத்துழைப்பு  இல்லாமல் கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாது  என்றார் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன்.

பொதுமக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள், கரப்பான் பூச்சி உள்ளிட்டவைகளை முற்றிலுமாக ஒளிக்க முடியாது என மேங்கு வங்க முன்னாள கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி. பாலசந்திரன்  தெரிவித்தார்.

தமிழ்நாடு பூச்சி மேலாண்மை சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு நிபுணர் முனைவர் பசுபதி வெங்கட் கலந்து கொண்டு பல்வேறு இனங்களைச் சேர்ந்த பூச்சி வகைகளிடமிருந்து உணவு மற்றும் வேளாண் பொருள்களைப் பாதுகாப்பது குறித்த தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது.

சென்னை
தமிழ்நாடு பூச்சி மேலாண்மை சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு வகைகளையும் உற்பத்தி செய்வதோடு அவற்றை பத்திரமாக பாதுகாப்பதில் பூச்சி மேலாண்மைத் தொழில் முக்கியத்துவம் பெருகிறது. அதே நேரம் பூச்சிகளையோ அல்லது எலி உள்ளிட்டவை களையோ முற்றிலுமாக நாம் ஒழித்துவிட முடியாது.

குடியிருக்கும் வீடுகள், அலுவலகங்கள், கிடங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பூச்சிகளால் ஏற்படும் தீமைகள் தொடர்ந்து வருகிறது. இதுமட்டுல்லாது வெளிநாடுகளிலிருந்து அந்நிய வகை பூச்சிகள் தாக்கமும் இருந்து வருகிறது.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பூச்சி மேலாண்மை துறையினரின பங்கு முக்கியத்துவம் பெருகிறது. மேலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை அளிப்பதால் பூச்சி மேலாண்மைத் துறையில் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும்.

கொசு ஒழிப்பில் மக்களின் பங்களிப்பு அவசியம்:

நவீன அறிவியல் மூலம் புதிய பூச்சி மருந்துகள் கண்டறியப் பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சென்னை போன்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதில் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் இல்லை.

இதற்கு பொதுமக்களின் அலட்சியப் போக்கு முதன்மை காரணமாக உள்ளது. கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவது, சாக்கடை கழிவு நீரை சாலைகளில் வெளியேற் றுவது உள்ளிட்டவைகளால் கொசுக்கள், ஈக்கள், எலிகள் உள்ளிட்டவை பெருகி வளர்கின்றன.

எனவே கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். எனில் முதலில் பொதுமக்கள் தங்களது முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும். கால்வாய், ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பது,  நீர்நிலைகள் எங்கும் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தீமை விளைவிக்கும் தாவரங்களை அடியோடு ஒழிப்பது.

மழைக் காலம் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட வைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதோடு பொறுப்பு ணர்வு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதன் மூலம் கொசுக்களை முழுமையாக ஒழிக்கலாம் என்றார் பாலசந்திரன்.

இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஆணையர் வி. நந்தகுமார், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் கே.மணி (உரம்), சண்முகசுந்தரம் (தாவர பாதுகாப்பு), தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர், சங்க நிர்வாகிகள் கே.ஆர். பாலமுரளி, எஸ்.ஜோசப் எட்மண்ட், ஜெ,கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top