Close
நவம்பர் 22, 2024 5:57 காலை

அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம் இருந்து வருகிறது. இதனை மாற்றிட யாராலும் முடியாது என இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேபர்பாபு தெரிவித்தார்.
வடசென்னையில் உள்ள சன்மார்க்க அமைப்புகள் சார்பில் வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் மற்றும் முப்பெரும் விழா சென்னை தண்டையார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு தலைமை வகித்து பேசியதாவதமிழகத்தில் சுத்த சன்மார்க்க நெறிகளை போற்றி வளர்த்தவர்  வள்ளலார். அவரது இருநூறாவது ஆண்டு பிறந்த நாளை முப்பெரும் விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதற்காக ரூ. 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட உள்ளது. பசி என்கிற நெருப்பை அணைப்பதற்காக காலமெல்லாம் அன்னதானத் தை ஊக்குவித்து அதனை  செயல் படுத்தியும் காட்டியவர் வள்ளலார்.
எனவேதான் அவரது வழியை பின்பற்றி மதிய உணவோடு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் அளிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடக்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் எப்போதும் அமைந்து பூங்காவாகவே இருந்து வருகிறது. ஆனால் இங்கு ஆன்மீகப் பிரச்னைகளை கிளப்பி இதனை கலவர பூமியாக மாற்றுவதற்கு சிலர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண் டுள்ளனர். ஆனால் அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம்  தொடர்ந்து இருந்து வருகிறது என்பதால் இதனை யாராலும் மாற்ற முடியாது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு:
கிளாம்பாகத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை அதிமுக அரசு அறிவித்தாலும் அவர்களது ஆட்சியில் 40 சதவீத பணிகளையே முடித்திருந் தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்திற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு. தற்போது 90் சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது பெய்த சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
எனவே இப்பிரச்னைகளை எல்லாம் சீர்படுத்திட வேண்டிய நிலை உள்ளது. மேலும் சுமார் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு தார் சாலை, காவல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  அனைத்து பணிகளும் முடிந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் திறக்கப்படும் என்றார் சேகர்பாபு .
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை இணை ஆணையர் முல்லை, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா,  மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதிசெயலாளர் லட்சுமணன், மருத்துவர் ராஜமூர்த்தி மற்றும் சன்மார்க்க சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top