Close
நவம்பர் 21, 2024 6:53 மணி

பெற்றோரின் எதிர்பையும் மீறி சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்

புதுக்கோட்டை

திருமயம் கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

திருமயத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 9 மாத கர்ப்பிணியான காதலியை காவல்துறையினரின் உதவியுடன்  இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா(21). இவரும் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்ற இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஷா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அதேபோல் கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும், ஐயப்பன் சேலத்திலிருந்து அவ்வப்போது சென்னை சென்று அவரது காதலியான ஆஷாவை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷா கர்ப்பம் அடைந்ததால்,  உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு   ஐயப்பனை கேட்டுள்ளார்.

இதனையடுத்து ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷா வை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என  கூறினாராம்.

ஆனால், ஆஷா மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  9 மாத கர்ப்பிணியான ஆஷா,  திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 திருமயம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுமையா பானு, காதலர்கள் ஆஷா-ஐயப்பன் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை நேரில் வரவழைத்து விசாரணை செய்தார்.

அந்த விசாரணையில் ஐயப்பன் ஆஷாவை காதலித்து வந்ததையும், திருமணத்துக்கு  பெற்றோர்   சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் . காவல்துறை ஒத்துழைப்புடன்  ஆஷாவை திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஐயப்பனின் பெற்றோர்கள் ஆஷாவை  திருமணம் செய்தால், தங்கள் வீட்டிற்கு அவர்கள் இருவரும் வரக்கூடாது என்று கூறிவிட்டுச்சென்றனர்.

இதனையடுத்து   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெள்ளை நெஞ்சன் தலைமையில், பெண் வீட்டார் ஏற்பாட்டில், திருமயம் கலியபெருமாள் கோயிலில் ஆஷா- ஐயப்பன் ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top