Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

மணலியில் ரூ.1.90 கோடி செலவில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு

சென்னை

மணலில் ரூ.1.90 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, உடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ். சுதர்சனம், கே.பி. சங்கர் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் உள்ளிட்டோர்

சென்னை திருவொற்றியூர் அருகே மணலியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மணலி பாடசாலை தெருவில் சென்னை தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள வகுப்பறைகள் மிக மோசமாக இருந்ததால் அதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டித் தர வேண்டும்  என‌ ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கட்டடம் கட்டுவதற்காக வடசென்னை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.  இதனை படித்து கட்டண பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் தலைமையில் வடசென்னை எம் பி டாக்டர் கலாநிதி வீராசாமி வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ் சுதர்சனம், கேபி சங்கர் ,மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறு முகம், மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், பகுதி செயலாளர் அருள்தாசன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், கீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ் சுதர்சனம், கே பி சங்கர், மண்டல குழு தலைவர் ஏ. வி. ஆறுமுகம் சென்னை மாநகராட்சி வடக்கு  மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், உதவி ஆணையர் காமராஜ், திமுக பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, வட்டச் செயலாளர் வ.முத்துசாமி உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top