சென்னை, திருவொற்றியூர் டிவிஎம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தையல் மெஷின்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள்கள், கல்வி உதவித்தொகை மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் சென்னை பெருநகர சைதாப்பேட்டை நீதிமன்ற குற்றவியல் நடுவர் ஆர். வேல்ராஜ், தொழிலதிபர் ஜி வரதராஜன், தொழிலதிபர் வடிவேல் முகுந்தன், டிவிஎம் சேவா பாலம் நிறுவனர் மா. இருளப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.