Close
மே 20, 2025 5:17 காலை

ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் பாராட்டு விழா

சென்னை

சத்தியவேல் முருகனாருக்கு சென்னை ஐசிஎப் -ல் உள்ள அ/மி கமல விநாயகர் சத்சங்கம், அரங்கில் நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா

மலேசியாவில் தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில் கடந்த  16-06-2023 அன்று மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையினர் நடத்திய நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், செந்தமிழாக பத்ததி உருவாக்கி 40  ஆண்டுகளுக்கு மேலாக அருந்தமிழ் வழிபாட்டுப் பணி ஆற்றிவரும் ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் பணியைப் பாராட்டும் விதமாக அவருக்கு மலேசியா அரசால்  தபால் தலை வெளியிடப்பட்டது.
தமிழ் வழிபாட்டுப் பணிக்காக வெளிநாட்டில் தபால் தலை வெளியிடப்பட்டு அங்கீகாரம் பெறுவது என்பது வரலாற்றில் இவர் ஒருவர்தான். இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள்  சார்பில்  இம்மாதம்  (02-10-2023) சென்னை ஐசிஎப் -ல் உள்ள அருள்மிகு கமல விநாயகர் சத்சங்கம் அரங்கில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு  மாண்பமை நீதியரசர் ஏ.கே. இராஜன்  தலைமை வகித்தார். தொழிலதிபர்(இந்தியா பில்டர்ஸ்) சி.தம்பிக் கலைஞன்  தொடக்கவுரை ஆற்றினார்.
நீதியரசர் ஏ.கே.ராஜன், தனது தலைமை உரையில் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கமிட்டியின் ஆய்வறிக்கையில் உள்ள பல விஷயங் கள் சத்தியவேல் முருகனாரிடம் பெற்ற செய்திகளின் அடிப்படை யிலேயே வழங்கி இருந்தேன். அந்த அறிக்கைக்கு பெரும் பங்கு ஆற்றியவர் இவர். இந்த தபால் தலை என்பது மலேசிய நாட்டில் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது. அதைப்போல  நமது நாட்டிலும்  தேசிய அளவில் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்த  வேண்டும் என்றார் நீதியரசர் ஏ.கே. ராஜன்பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top