வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர் வயது முதிர்வின் காரணமாக 28.9.2023 அன்று சென்னையில் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புகழஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது.
புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசி ரியர் நாராயண மூர்த்தி, அரிமளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மு.மேகலா,
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் செந்தாமரை பாலு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து, செயலாளர் மு.முத்துக்குமார், முன்னோடி விவசாயிகள் ஜி.எஸ்.தனபதி, காமராஜ் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். முடிவில் விமலா நன்றி கூறினார்.