Close
நவம்பர் 21, 2024 10:30 மணி

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருது: சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு வழங்கல்

சென்னை

புதுதில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருதினை சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமாரிடண் வழங்கிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களின் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்களின் தேவை இந்த ஆலை பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு 9 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களில் சி.பி.சி.எல் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்கான சிறப்பு விருதினை கடந்த திங்கள்கிழமை புதுடில்லியில் நடைபெற்ற 26-வது எரிசக்தி மாநாட்டின்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி சி.பி.சி.எல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்.அரவிந்த் குமாரிடம் வழங்கினார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top