ரூ.33 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ஆர்.கே.நகர் தொகுதி வினோபாநகரில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பல்நோக்கு கட்டத்திற்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதில், சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், தி.மு.க. மாவட்டச் செயலாளர் நிலைக்குழு தலைவர் த.இளைய அருணா, மண்டலக் குழு தலைவர் யூ.கணேசன், பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.