Close
ஜூன் 30, 2024 4:37 மணி

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் 145 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்த மாணவர்கள்

புதுக்கோட்டை

புதுகை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் நடந்த மண்டல அறிவியல் மாநாட்டில் பேசுகிறார், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் 145 ஆய்வுக் கட்டுரைகளை மாணவர்கள்  சமர்பித்து அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் மண்டல மாநாட்டில் 10 மாவட்டங்களில் இருந்து 145 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப பரிமாற்றத்துறையும் இணைந்து 31-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் கிழக்கு மண்டல மாநாடு புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடத்தியது.

மாநாட்டின் தொடக்க விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  இயக்குநர் ஆர்.துரை, செயலாளர் எம்.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.

புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், கல்லூரி மேலாளர் ஆர்.நெப்போலியன் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்தரங்கம்: மாநாட்டில் பங்கேற்ற வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘அறிவியல் பார்வையில் சுற்றுச்சூழல்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் வி.சேதுராமன், ‘அறிவியல் பார்வையில் கல்வி’ என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் பேசினர்.

பரிசளிப்பு, பாராட்டு நிகழ்வு:   நிறைவு விழாவுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சுகுமாரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண்விவேக் வரவேற்றார்.  இம்மாநாட்டில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து 145 ஆய்வுக் கட்டுரைகள் மாணவர்கள் சமர்ப்பித்தார்கள்.  300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானிகளும் 200-க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் 47 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப் பட்டது.  தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் கோவை மாவட்டத்தில் நவம்பர் 25, 26  தேதிகளில் நடைபெற வுள்ள தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கு பெற இருக்கிறார்கள்.

ஆய்வறிக்கைக்கான தொகுப்பை மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் சமர்ப்பித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ராமதிலகம் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – கிருஷ்ணன், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – இயலினி, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – கீர்த்திஸ்ரீ,  புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி – பா.உ.தியானோ, கிர்த்திகா, புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி – கிஷோர்குமார், திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி – முஹமது பயாஸ் குழுவினர்களின் ஆய்வுக் கட்டுரை கள் தேர்வு செய்யப்பட்டன.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top