Close
நவம்பர் 22, 2024 12:13 காலை

தேசிய குழந்தைகள் தினம்: புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நடை பயணம்

புதுக்கோட்டை

குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை யில் நடந்த விழிப்புணர்வு நடைபயணத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் (நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர்-20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு)  குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடை பயணத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா   (14.11.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் குழந்தைகளின் கல்வி, சமூக தீர்வுகள் உள்ளிட்டவைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த நடைபயணமானது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியில் குழந்தைகளை பாதுகாப்போம் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம், அழைப்போம் அழைப்போம் போக்சோ சட்டம் புகாரை பதிவு செய்ய 1098 -ஐ அழைப்போம்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த குழந்தைகள் தின விழிப்புணர்வு நடை பயணம்

குழந்தைகள் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை 350 மாணவிகள் கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற உள்ளது.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசின் உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கல்வியில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் சிறந்த விளங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்   ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top