Close
நவம்பர் 21, 2024 11:17 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 , 949 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கல்

புதுக்கோட்டை

மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தகுதியான 18,949 மகளிர் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை கலைவாணர் அரங்கத் தில், நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000-வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பற்று அட்டைகளை வழங்கினார்.

இதேபோல், கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில், செங்கிப்பட்டி சாலையில் உள்ள சண்முகா திரையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்    மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை
பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கிய அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர்

நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா  பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக Phase-I -இல் 2,54,090 விண்ணப்பங்களும், Phase- I I – இல் 1,59,742 விண்ணப்பங்களும் 20.08.2023 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 10,902 விண்ணப்பங்களும் என ஆகமொத்தம் 4,24,734 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியான மகளிருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 15.09.2023 அன்று தொடக்கி வைத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தில் 2,98,298 தகுதியான மகளிர் பயனாளிகளில் அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலனமச்சர் அவர்களின் வாழ்த்து மடல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,520 மகளிர் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகை  பெற்றுக் கொள்ள ஏதுவாக வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 18,949 தகுதியான மகளிர் பயனாளிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவில் 2,000 மகளிர் பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்து மடலும், முதற்கட்டமாக 100 மகளிர் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகை பெற்றுக்கொள்ள ஏதுவாக வங்கி பற்று அட்டைகள் பற்று அட்டையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,

திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) .மு.செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்க.ஸ்ரீதர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கு.சாந்தி,

புதுக்கோட்டை வட்டாட்சியர் கவியரசன், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர்ராமசாமி, கந்தர்வக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்செல்வி, வெள்ளாளவிடுதி ஊராட்சிமன்றத் தலைவர் பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top