Close
நவம்பர் 22, 2024 2:56 காலை

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள்

புதுக்கோட்டை

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்த பசுகை புதுகை கூட்டமைப்பினர்

பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் ரியாஸ் கான், பிரகாஷ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியும், மின்சார ஊழியர்கள் பராமரிப்பு என்ற பெயரில் வரம்பின்றி மரங்கள் வெட்டப்படுவதை ஒழுங்குபடுத்தக் கோரி அந்த மனுவில்  வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் மனு அளித்த பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பினர்

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்டத்தில்  அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். இதில்  பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top