Close
அக்டோபர் 5, 2024 6:43 மணி

வரைமுறையின்றி மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்

புதுக்கோட்டை

மின்வாரிய பொறியாளரிடம் மனு அளித்த பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு" சார்பில் ஒருங்கிணைப்பாளர் சா.விஸ்வநாதன், மரம் நண்பர்களின் செயலர் ப.ராதாகிருஷ்ணன்

மாதாந்திர பராமரப்பு என்ற பெயரில் மரங்களை வெட்டிச்சாய்ப்பதை மின்வாரியம் தவிர்க்க வேண்டுமென பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில்,  மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஏ.முருகனிடம் “பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு” சார்பில் ஒருங்கிணைப்பாளர் சா.விஸ்வநாதன், மரம் நண்பர்களின் செயலர் ப.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் கலந்துகொண்டு மனு  அளித்தனர்.

அம்மனுவில், பராமரிப்பு என்ற பெயரில் வரைமுறையின்றி  மின்வாரிய ஊழியர்கள் மரங்களை வெட்டிச் சாய்ப்பதை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட பொறியாளர் ஏ.முருகன், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் சுற்றறிக்கை  அனுப்பி, உரிய காரணங்களின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

மாவட்டம் முழுவதும் மரங்களைப் பாதுகாக்க அறவழியில்  களப்போராட்டத்திலும் சட்டப் போராட்டத்திலும் களமிரங்கியுள்ள பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பினரின் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top