Close
ஜூன் 30, 2024 5:35 மணி

புதுக்கோட்டை வாசகர் பேரவைக்கு இன்று 8 வயது

புதுக்கோட்டை

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் பணிபுரியும் பெருமக்களுக்கு வாசகர் பேரவை சார்பில் நூல்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று (டிச. 8) தனது எட்டாவது  பிறந்தநாளை பெருமையுடன் கொண்டாடுகிறது.

புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.மறைந்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்த, 2015 டிசம்பர் 8 -ல் தொடங்கப் பட்ட வாசகர் பேரவை, தொடர்ந்து இளையோர் களிடம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும் பணியில், புதுகையின் அடையாளமாகத் திகழும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில்,  செயலாளர் சா. விஸ்வநாதனின்  முழுமை யான  அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நல்ல நூல்களை வழங்குவது, சிறந்த வழிகாட்டுதல்களைத் தருவது போன்ற பணிகளையும் செய்து வருகிறது.இன்றைய நாளில் தொடர்ந்த அந்தப் பணிக ளைச் செய்வது என்றும் உறுதி எடுத்துக் கொள்கிறது.

வாசகர் பேரவை சார்பில் இதுவரை பள்ளி, கல்லூரிகளில் 70 -க்கும் மேற்பட்ட கூட்டங்கள், கருத்தரங்குகள், சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. சத்திய சோதனை நூல் 500 நபர்களுக்கு வாசகர் பேரவையினர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top