Close
நவம்பர் 21, 2024 10:37 மணி

பொன்னமராவதி அருகே 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் : அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நடைபெற்ற விழாவில் 5 பவுன் தங்கக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குகிறார், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு  5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ,மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில்  கூட்டுறவுத் துறையின் சார்பில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (22.12.2023) வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர்  ஏழை, எளிய பொதுமக்கள் பொருளா தாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பொதுமக்களின் நலனிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்களான, பொன்னமராவதியில் 32 பயனாளிகளுக்கு ரூ.15.64 இலட்சமும், செம்பூதியில் 12 பயனாளிகளுக்கு ரூ.4.38 லட்சமும், திருக்களம்பூர் 26 பயனாளிகளுக்கு ரூ.11.07 லட்சமும், நல்லூரில் 28 பயனாளிகளுக்கு ரூ.7.80 லட்சமும், மேலத்தானியத்தில் 46 பயனாளிகளுக்கு ரூ.15.54 லட்சமும், அரசமலையில் 3 பயனாளிகளுக்கு ரூ.0.78 லட்சமும், அம்மன்குறிச்சியில் 17 பயனாளிகளுக்கு ரூ.8.43 லட்சமும், ஆலவயலில் 43 பயனாளிகளுக்கு ரூ.15.51 லட்சமும் என மொத்தம் 207 பயனாளிகளுக்கு ரூ.79.16 லட்சம் மதிப்பீட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கு இது பேருதவியாக அமையும். தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களை போன்ற மற்றவர்களுக்கும் இத்திட்டம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

பொதுமக்களின் நலனிற்காக செயல் படுத்தப்படும் இதுபோன்ற நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், பொன்னமராவதி கள அலுவலர் மற்றும் செயலாட்சியர் அன்னலட்சுமி, பொன்னமராவதி பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ஷியாமளா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர்  சாந்தா, மேலத்தானிய ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன், நீர்பாசன குழுத் தலைவர் முத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், செயலாட்சியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top