மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு வட்டாரத் தலைவர் அந்தோணிசாமி தலைமையில் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
அறிவியல் பாடல்களை வானவில் மன்ற கருத்தாளர் அனாமிகா, பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் முருகதாஸ் ஆகியோர் பாடினர். கரம்பக்குடி ஒன்றிய மாநாட்டை மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் தொடக்கி வைத்து பேசினார்.
இதில் குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம் அறிவியல் அற்புதங்களை விளக்கும் வகையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்வுகளை செய்து காண்பித்தார். இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவியல் இயக்கம் செய்த பணிகளை வட்டார செயலாளர் சாமியப்பன் பேசினார்.
பின்னர் புதியதலைவராக க.சற்பிரசாதம்,செயலாளராக பி.வீரபாலன்,பொருளாளராக வீ.முத்து, துணைத் தலைவர் களாக அந்தோணிசாமி, பிச்சைமுத்து, இளவரசி, விமலா, இணை செயலாளர்களாக எவரெஸ்ட் சுரேஷ், சாமியப்பன், ஷோபா, அனாமிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அறிவியல் இயக்க கரம்பக்குடி ஒன்றிய மாநாட்டில், கந்தர்வகோட்டை எம்எல்ஏ- எம்.சின்னத்துரை கலந்து கொண்டு பேசுகையில், அறிவுச் சமூகத்தை உருவாக்க அறிவியல் இயக்கத்தினர் பாடுபட வேண்டும். அறிவியல் இயக்கம் இதுவரை செய்த மக்கள் பணிகளையும், இனி வரும் காலத்தில் அறிவியல் பூர்வ அறிவை வளர்க்கும் விதமாக செய்ய வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு வானவில் மன்றம் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வரை சென்று வந்த குழந்தை விஞ்ஞானி மனோஜ் மற்றும் வளர்ந்து வரும் மாணவ பேச்சாளர் தீஷா திரவியராஜ் ஆகியோருக்கும், கரம்பக்குடி டாக்டர் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கள் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு சென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில், வட்டாட்சியர் சுகுமார், சமூக ஆர்வலர்கள் அன்பழகன், முஹம்மது ஜான், அறிவொளி முருகேசன், சாந்தியமூர்த்தி, ஞானசேகரன், டாக்டர் ஜெயகாந்தன், ரோட்டரி பழனியப்பன், ரோஷினி அப்துல்லா, ஆசிரியர்கள் அப்பு, விஸ்வநாதன், ராஜா ரிச்சர்ட், அமுல்துரை, ரவீந்திரன், திவ்யா, சரண்யா, பயிற்சி மைய மாணவ, மாணவிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம்கள் இடம்பெறாத வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிகள் தொடங்கும் நேரத்தை காலை 10 மணியாக மாற்றியமைக்க வேண்டும். தமிழக அரசு போலி அறிவியலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் தொல்பொருள் அருங்காட்சியகம் (மியூசியம்) போல மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தினசரி கண்டுகளிக்கும் விதமாக அறிவியல் காட்சி கூடம், மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும்.
அறிவியல் இயக்க முன்னோடி விவேகானந்தன், அறிவியம் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து, மாவட்ட செயலாளர் ஆர். முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் முனைவர் பிச்சைமுத்து வரவேற்றார். நிறைவாக வட்டார பொருளாளர் திருமுருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.