Close
நவம்பர் 22, 2024 4:22 காலை

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது

சென்னை

அமோனியா வாயுச் கசிவு ஏற்பட்ட சென்னை எண்ணூர் தனியார் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செவ்வாய்க்கிழமை நேரில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.

ஜனநாயக முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அடக்குமுறையை கையாள்வதைக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேசனல் என்ற தனியார் உரத்தொழிற்சாலையில் கடந்த கடந்த டிச.26-ம் தேதி நள்ளிரவு அமோனியா பம்பிங் செய்யும் குழாயில் கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்பு உள்ளாயினர்.

இதனையடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கடந்த ஒரு வாரமாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலையை முற்றுகை யிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்க ளைச் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது,

சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக் காகவும், தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்பரேசன் கிடங்கில் ஏற்பட்ட விபத்தைக் கண்டிக்கும் வகையிலும் நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

தற்போது அமோனியா வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கடந்த ஒரு வாரமாக பெண்கள், குழந்தைகளுடன் தொடர்ந்து போராடி வருகின்ற னர்.
கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலை தற்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக அமோனியா கசிவு ஏற்பட்டு மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. தொழிற்சாலைகளுக்கோ அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்கோ நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

ஆனால் முன்னேற்றம் என்பது மக்களுடைய பாதுகாப்புக்கு முன்னுரிமை தர வேண்டும். இதைவிடுத்து மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய எந்த ஒரு நிறுவனத்தையும் நாங்கள் உறுதியாக எதிர்ப்போம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசற்ற வாரியமாகச் செயல்பட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்த விசாரணை ஆணையத்தால் குற்றஞ் சாட்டப்பட காவல்துறை அதிகாரிக்கு வழங்கப்பட்ட பணி உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

உரிமை ளுக்காகவும், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜனநாயக முறையில் அறவழியில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் மீது காவல்துறை அடக்குமுறை யைக் கையாள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை
 பொதுமக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  நேரில் பங்கேற்று ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஆலையை தற்காலிகமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆலையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிப்பதற்கு பதிலாக தொடர்ந்து மௌனம் காத்துவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே அரசு நியமித்து குழு ஆலையில்  விரிவாக ஆய்வு மேற்கொண்டு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை யாக உள்ளது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றார் இரா. முத்தரசன்.

இதில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டி யன்,  வடசென்னை மாவட்ட செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top