Close
மே 21, 2025 4:29 காலை

புதுகை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ

புதுக்கோட்டை

எம்எல்ஏ முத்துராஜா

நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை நடந்த முகாமில் பயனாளிகளுக்கு புதுக்கோட்டைஎம்.எல்.ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆணைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மார்த்தாண்டபுரம் ஆரோக் கியமாதா மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்டத்தில் வீடு தேடி சேவை முகாம் 27, 28, 32, 33 ஆகிய நான்கு வார்டுகளுக்கு நடைபெற்றது.

முகாமில் புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பார்வையிட்டார். அதன் பின்பு மக்கள் கோரிக்கைகளை பதிவு செய்து உடன டியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகர்மன்ற ஆணையர் சியாமளா, நகர்மன்ற உறுப்பினர் இராசுசந்தோஷ், மூர்த்தி, ராஜேஸ்வரி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சார வாரியம், பிறப்பு இறப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வருவாய்த்துறை மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை சார்பிலும் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top