Close
நவம்பர் 21, 2024 4:38 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 764 பயனாளிகளுக்கு தாலிக்குத்தங்கம்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

அரிமளத்தில் நடைபெற்ற விழாவில் மகளிருக்கு தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி வழங்குகிறார், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சி.வி.ஆர். திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை, சட்டம், நீதிமன் றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  (09.01.2024) வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பெண்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதில் அதிக முக்கியத் துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றையதினம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சி.வி.ஆர். திருமண மண்ட பத்தில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

அதன்படி,  அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியங்கள் சார்ந்த பட்டம் மற்றும் பட்டயம் படித்த 71 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.50,000- வீதம் ரூ.35,50,000- மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் 568 கிராம் தங்கமும், ஏனைய 10-ஆம் வகுப்பு வரை படித்த 38 பெண்க ளுக்கு ரூ.25,000- வீதம் ரூ.9,50,000- மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் 304 கிராம் தங்கமும் என ஆகமொத்தம் 109 பெண்களுக் கு ரூ.45,00,000 நிதியுதவி தொகையும், 872 கிராம் தங்கமும் இன்றையதினம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 10 -ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் படித்த அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 45 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 85 பயனாளி களுக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 34 பயனாளிகளுக்கும்,

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 36 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தைச் சேர்ந்த 35 பயனாளிகளுக்கும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 75 பயனாளிகளுக்கும், குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 56 பயனாளி களுக்கும்,

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 28 பயனா ளிகளுக்கும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 113 பயனாளிகளுக்கும்,

திருமயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 25 பயனாளிக ளுக்கும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 103 பயனாளிகளுக்கும், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 79 பயனாளிகளுக்கும் என ஆகமொத்தம் 764 பயனா ளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே தமிழநாடு முதலமைச்சர்செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம்,

வீட்டுவசதி வாரிய உறுப்பினர் இளையராஜா, துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், அறந்தாங்கி நகர்மன்ற துணைத் தலைவர் முத்து, வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலன், கு.சரவணராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top