Close
அக்டோபர் 5, 2024 7:19 மணி

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள்: காவல்துறை அறிவிப்பு

தேனி

ஜல்லிக்கட்டு புதிய விதிமுறைகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை காவல்துறை  அறிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் காளைகளுக்கான விதிமுறைகளை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

போட்டி தொடங்கும் வரிசையில் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது. காளைகளின் உரிமையா ளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டு வரக்கூடாது.

ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிச்சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத் தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும் போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். காளைகள், வீரர்கள் இருதரப்பினரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்ன ரேஅனுமதிக்கப்படுவார்கள்.காளைகளின் உரிமையாளர்கள்,  மாடுபிடி வீரர்கள் உட்பட அனைவரும் விழாக்குழு மற்றும் போலீஸ் நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top