Close
நவம்பர் 21, 2024 2:51 மணி

மெய்வழிச்சாலையில் பொங்கல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் நடைபெற்ற பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாதி சமூக மத பாகுபாடுகளை கடந்து 69 சமூகங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் பொங்கலிட்டு  கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளை கடந்து இன்றும் 69 ஜாதி மத சமூகங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பாகுபாடுகளை கடந்து அந்த கிராமத்தில் அமைந்துள்ள பொன்னரங்க தேவாலய வளாகத்தில் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் இறைவனை வழிபட்டு அந்த பொன்னுரங்க தேவாலயத்தின் சாலை வர்க்கவான் தீர்த்தம் கொடுத்து தீபம் காட்டியதும் அனைவரும் ஒரே நேரத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.

புதுக்கோட்டை
மெய்வழிச்சாலையில் நடைபெற்ற பொங்கல் விழா

அப்போது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் குறித்த பாடல்கள் பாடப்படுவதோடு உருமி உள்ளிட்ட அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து அந்த ஆலயத்தை சுற்றி வலம் வந்து பிரார்த்தனை செய்தனர்.

இதன் பின்னர் அனைவரும் பொங்கல் வைத்து முடித்த பின்பு மீண்டும் அந்த பொங்கல் பானைகள் பொன்னுரங்க தேவாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு எல்லா பொங்க பானையில் இருந்தும் சிறிது சிறிது பொங்கல் எடுக்கப்பட்டு அதனை ஒரே படையலாக படையல் இட்டு பிரார்த்தனை செய்து பிரசாதமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் விழா கடந்த 81 வது ஆண்டாக அந்த கிராமத்தில் இந்த பாரம்பரிய நடைமுறை வழக்கத்தில் உள்ளது. காண்பதற்கு இந்த விழா விநோதமாக காணப்பட்டாலும், இன்றளவும் அந்த கிராமத்தில் ஜாதி,சமய  பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் அண்ணன் தம்பியாய் சகோதர பாசத்துடனும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன்  வாழ்த்து வருகின்றனர்.

மேலும், தமிழர்களின் பாரம்பரிய நடைமுறைகளை கைவிட்டு விடாமல் அவற்றை அப்படியே பின் தொடர்ந்தும் பொங்கல் விழாவை அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top