Close
அக்டோபர் 5, 2024 6:07 மணி

திருமயம் அருகே கடியாபட்டியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை

திருமயம் அருகே கடியாபட்டியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.மொத்தம் 36 ஜோடி மாட்டு வண்டிகள்  பங்கேற்ற பந்தயம் 2 சுற்றுகளாக நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் வெற்றிக்கோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த பந்தயத்தில் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி , மாவட்டம் உள்ளிட்ட தமிழகத் தின் பல பகுதிகளில் இருந்து  மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டிற்குகடியாபட்டியிலிருந்து ராயவரம் வரை சென்று  12 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு வகையில் 13 ஜோடிகளும், 9 கிலோ மீட்டர்  தொலைவிற்கு சிறிய மாட்டு வகையில் நடைபெற்ற போட்டியில் 25 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார், 2ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 3 ம் பரிசு காரைக்குடி கருப்பண்ணன் , 4 ம் பரிசு கொத்தமங்கலம் சேகர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.

புதுக்கோட்டை
திருமயம் அருகே கடியாபட்டியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டி ருந்தது. இதில் மாட்டு வண்டிகள் அதிகம் பங்கு பெற்றதால் பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் சாமி குமார், திண்டுக்கல் மோகன்ராம், 2 -ம் பரிசு, சித்தரஞ்சாம்பட்டி பெரிய அய்யனார், மேல்நிலைப்பட்டி கருப்பையா, 3 -ம் பரிசு புலிமலைப்பட்டி தஸ்விகா கார்த்திக், மாங்குளம் பாரதிராஜா, 4 -ம் பரிசு சாத்தம்பட்டி வீரத்தமிழச்சி, திருச்சி அன்பில் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.

புதுக்கோட்டை
மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகள் தான்தான் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன்‌ ஒவ்வொரு வண்டியையும் முந்திச்சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  சாலையின் இருபுறமும் நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.

முன்னதாக, பெரிய மாட்டிற்கான போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.சிறிய மாட்டிற்கான போட்டியை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

இதில், ‌முன்னாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம் உள்ளிட்டோர்‌ கலந்துகொண்டனர்.பாதுகாப்பு பணிகளை பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர்  அப்துல்ரகுமான் தலைமையில் போலீஸார் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top