Close
ஜூலை 2, 2024 2:10 மணி

முக்காணிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை

முக்காணிப் பட்டியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை அருகே முக்காணிப் பட்டியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

புதுக்கோட்டை அருகே உள்ள முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காலை 8-15 மணி முதல் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு 4.50 மணியுடன் நிறைவு, இதில் 603 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் 174 வீரர்கள் களம் கண்டனர்,

 இதில் 17 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. இந்த ஜல்லிக்கட்டில் 24 காளைகளை தழுவிய புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர் சிறந்த காளையராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஹோண்டா சைன் பைக் வழங்கப்பட்டது.

இவர் கடந்த ஆண்டும் இதே ஜல்லிக்கட்டில் 20 காளைகளை தழுவி பைக்கை வென்றார், மேலும் இதில் சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த பிரான்ஸ் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டு எக்ஸெல் ஹெவி டூட்டி இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது

முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்று பின்னர் கொடியசைத்து தொடவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அவர் இருக்கும் போது காளைகளை தழுவிய வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளருக்கும் ரொக்க தொகையை பரிசாக வழங்கினார்.

சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியல் மாட்டின் உரிமையாளர் அனைவருக்கும் தென்னங்கன்னு வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் வெற்றி பெற்றும் மாட்டின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, டைனிங் டேபிள், மிக்சி, சைக்கிள், சில்வர் அண்டா, ட்ரெஸ்ஸிங் டேபிள், செல் போன், கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த மாடுபிடி வீரர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று சிறந்த காளைக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top