அரசு பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியை 10 மணி நேரத்தில் பட்டாணியில் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட செங்கல் சூளைமேட்டை சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (36). சுண்ணாம்பு குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 10 மணி நேரம் 5 நிமிடத்தில் ஒரு பட்டாணியில் ஒரு திருக்குறள் என 1330 பட்டாணியில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
திருக்குறளை தேசிய நூலாக நடுவன் அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவர் படைத்துள்ள இந்த திருக்குறள் சாதனையானது, ஆல் இந்தியா புக் ஆப் ஃப் ரெக்கார்ட் மற்றும் சேவேவேர்ல்டு ரெக்கார்டு ஆகிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது,
ஏற்கெனவே இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையில் திலகவதி பாஸ்கர் என்ற தலைப்பில் 2023 வரிகளில் கவிதைகளை எழுதி ஆல் புக் ஆப் ரெகார்ட், சேவேவேர்ல்ட் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பிடித்திருக்கிறார். 50 தலைப்புகளில் 50 கவிதைகள், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய சிறந்த எழுத்தாளரான திலகவதி 10 தொகுப்பு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.