Close
நவம்பர் 22, 2024 12:03 காலை

ஊராட்சி மன்றத் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து: ஆட்சியர் அதிரடி

புதுக்கோட்டை

ஊராட்சித்தலைவரின் அதிகாரம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் பேரில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்தது நாட்டாணிபுரசக்குடி  ஊராட்சி. இதன் தலைவராக இருப்பவர் சீதாலட்சுமி.
ஊராட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராமல் இருந்ததாக இவர் மீது கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக ஊராட்சிகள் சட்டப்படி விளக்கம் கேட்கப்பட் டிருந்தது. அதற்கு அவர் தந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 203-ன் படி ஊராட்சிக் கணக்கில் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top