தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான துண்டறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் எம்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ம.வீரமுத்து வரவேற்புரை யாற்றிய பின்னர், மாவட்ட மாநாட்டிற்கு பிறகு நடந்துள்ள வேலைகள் குறித்து பேசினார்.
நடைபெறவுள்ள துளிர் திறனறிவு தேர்வுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கை யிலான மாணவர்களை தேர்வில் கலந்து கொள்ள செய்வது எனவும் நமது மாவட்டத்தின் சார்பில் 5,000 மாணவர்களை தேர்வு எழுத தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், துளிர் திறனறிவு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 13 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்விற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து ஒன்றியங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளராக ம.வீரமுத்து இணை ஒருங்கிணைப்பாளராக ரகமதுல்லா, சண்முகபிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் குழந்தைகள் நலக்குழு தலைவர் க.சதாசிவம் மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் பிச்சைமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஷோபா, விமலா, செல்வராஜ், புவியரசு, வடிவேல், சாமியப்பன், ஓவியா ஒன்றிய செயலாளர் கள் ராஜு, வீரபாலன், சாலை வேலம்மாள், ராஜா, அருள்சுந் தரம், கஸ்தூரி ரெங்கன், தேன்மொழி, முனியாண்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் ஆர்.பிச்சைமுத்து அனைவ ருக்கும் நன்றி கூறினார்