Close
நவம்பர் 21, 2024 10:56 மணி

மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை அறிவித்த உண்ணாநிலை போராட்டம் ஒத்தி வைப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே நடைபெற்ற மகாத்மா காந்தி பேரவை ஆலோசனைக்கூட்டம்

காந்தி பூங்கா மீட்பு, புதுக்கோட்டை எம்பி தொகுதி மீட்பு மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து 25.1..2024 -அன்று அறிவிக்கப்பட்டிருந்த தொடர் உண்ணா நிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் முனைவர் வைர.ந.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை காந்தி பூங்கா மீட்பு, புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி மீட்பு மற்றும் புதுக்கோட்டையில் பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும் 25.01.2024 காலை 9 மணிக்கு  நடைபெற இருந்த தொடர் உண்ணாநிலைப் போராட்டம் புதுக்கோட்டை நகராட்சி தரப்பிலும்  காவல்துறைத் தரப்பிலும் இரண்டு நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் என்ற பேச்சு வார்த்தையின்படி  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

 27.01.2024ஆம் தேதிக்குள் கடைகள் மற்றும் பொருட்களை அகற்றிக் கொள்ளநடவடிக்கை எடுக்கப்படும்.காந்திப் பூங்காவை முழுமையாக சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

  24.01.2024 தேதி இரவு முதல் காந்திப் பூங்காவில் உள்ள வணிக நிறுவனங்கள் நடைபெறாமல் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 24.02.2024 தேதி இரவு முதல் காந்திப் பூங்காவில் உள்ள கடைகள் இயங்காது என நகராட்சி தரப்பில் ஒலிப் பெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்வது என உறுதிஅளிக்கப் படுகிறது.

 27.01.2024 -ஆம் தேதி வரை காந்திப் பூங்காவில் அகில இந்திய மகாத்மா காந்தி  தரப்பினர் கேட்டுக் கொண்ட கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டதால் உண்ணாநிலைப்போராட்டம் கைவிடப்படுகிறது.

வரும் 29.01.2024ம் தேதி காந்தி பூங்காவில் உள்ள பொழுது போக்கு உபகரணங்கள் ஆய்வு செய்து நீக்குவது தொடர்பாக நகராட்சி ஆணையாளர்,பொறியாளர் மற்றும் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை தரப்பினர் முன்னிலை யில் மாலை 5.மணியளவில் சமாதான கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

மேற்படி கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைப்பதாக இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டனர்.மேற்கண்ட தீர்மானங்களை எழுத்துப்பூர்வமாக கொடுத்ததன் அடிப்படையில் 29.01.2024 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுகிறது.

இது தவிர புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீட்பு மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு முறை கேடுகள் தொடர்பாக வரும் 30.01.2024 -ல் அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்த பின்னர் அனைத்து அமைப்புகளும் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுஎடுக்கப்படும் என்று அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் முனைவர் வைர.ந.தினகரன் தெரிவித்தார்.

இன்றைய காந்தி பூங்கா முன்பு நடைபெற்றகலந்தாய்வு கூட்டத்தில் ஊழல் தடுப்பு இயக்க தலைவர் மரு.ஷாஜஹான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டதலைவர் எச்.ஸலாஹீதீன்,  தமிழர் அறம் இயக்கம் நிறுவனர் ராமசாமி,  காவேரி வைகை
குண்டாறு அமைப்பு சங்கம் தலைவர் மிசா.மாரிமுத்து.

நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்ச்சி மற்றும் ஊழல் தடுப்பு இயக்க மாநில பொருளாளர்கே.ஆர்.ஏ. காளிமுத்து,  10 ரூபாய் இயக்க மாவட்ட தலைவர் கே.தினேஷ்பாபு,
சிபி.எம்.எல். மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் க.சி.விடுதலைக்குமரன்.

ரோட்டேரியன் ஜெய்பார்த்தீபன்,  நால்வர் நற்பணி இயக்கம் வடிவேலு, மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கம் ஆறுமுகம், தமிழர் கழகம் தெ. சுரேஷ்பாபு மற்றும் பல சமூக நல அமைப்புகள்,  சமூக ஆர்வலர்கள், காந்தி பேரவை நிர்வாக குழு உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர் என வைர.ந. தினகரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top