திருமயம வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.சிக்கந்தர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025 -ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித்திட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய வாக்காளர் தின உறுதி ஏற்கப்பட்டது.
கூட்டத்துக்கு, திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரண்யாசரவணன், சுந்தராம்பாள் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி உறுப்பினர்கள் எஸ்.முத்துலட்சுமி, வி. ஆனந்தி, சி. செல்வராணி, எம். கம்மை, கே. காந்திமதி, பி.ரெத்தினம், எம். பழனியப்பன், வி. வீராச்சாமி, ஏ. சூசைராஜ்அன்புமணி, ஜெ.பாண்டியம்மாள், சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத் தலைவர் சையதுரிஸ்வான் வரவேற்றார். ஊராட்சிச்செயலர் வீர.குமார் தீர்மானங்களை வாசித்து, நிறைவாக நன்றி கூறினார்.