திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025 -ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித்திட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், நூறுநாள் வேலைத்திட்டம், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம்-11, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய வாக்காளர் தின உறுதி ஏற்கப்பட்டது.
ஊராட்சித்தலைவர் பழ. நாச்சம்மை முன்னிலை வகித்தார். ஆடிட்டர் கலைராஜா ராமநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் ஏ. ஆனந்தி, எஸ். பொன்னழகி, ஆர். ரேவதி, வி.கலா, ராம.நாகப்பன், கே. முருகப்பன், சி.ராசு, அலுவலக உதவியாளர்கள் வாணி, யோகேஸ்வரி மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வள்ளுவர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஊராட்சிச்செயலர் ஆறுமுகம் வாசித்தார். ஊராட்சி உறுப்பினர் வி.பழனியப்பன் நன்றி கூறினார். முன்னதாக ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது.