Close
ஜூலை 7, 2024 10:51 காலை

தூய்மைப்பணியாளர்களுக்கு ஓராண்டாக உணவு வழங்கிவரும் திமுக கவுன்சிலருக்கு ஏரியா சபைக்கூட்டத்தில் பாராட்டு

சென்னை

திருவொற்றியூர் 12 வது வார்டு திமுக கவுன்சிலர் கவி கணேசனுக்கு ஏரியாசபை கூட்டத்தில் பொதுமக்கள் பாராட்டு

திருவொற்றியூரில் 60 தூய்மை பணியாளர் களுக்கு இரண்டு வேளை உணவை ஓராண்டாக வழங்கிவரும் திமுக கவுன்சிலர் கவி கணேசனுக்கு ஏரியாசபை கூட்டத்தில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலர் ஆணையர் உத்தரவின்படி பொதுமக்களின் கோரிக்கை களை அறிந்து கொள்ளவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஏரியா கிராம சபை கூட்டம் திருவொற்றியூர் 12 வது வட்ட மாமன்ற உறுப்பினர் வீ.கவிகணேசன் தலைமை யில்  நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் எஸ்.கமலக் கண்ணன் சென்னை குடிநீர் வாரியம் உதவி பொறியாளர் எஸ்.விஜய நிர்மலாசுகாதார ஆய்வாளர் ஆர்.சாருமதி,வரி வசூலிப்பாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுகவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் க.வீ.சதீஷ் குமார் ஒருங்கிணைப்பில் 12 வது வட்ட பகுதி சபை உறுப்பினர்கள் எஸ். வசந்தகுமார் ரகு ஆகியோரின் ஒத்துழைப்பில் 12 வது வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதி (ஏரியா) சபைக் கூட்டம் எழுத்துக்காரன் தெருவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டங்களுக்கு முன்னுதாரண நிகழ்வாக எல்.இ.டி திரையுடன் நடத்தப்பட்டது .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் எம்.வி.குமார்,பி.எஸ்.சைலஸ்,  ஆர்.பி. விமல்தாஸ், பாக்கியமணி ஆகியோருடன் அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்கள் தெருக்களில் உள்ள குறைபாடுகளையும் தேவைக ளையும் பகுதி சபை கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களின் குறைகளாக குடிநீர் அடி பம்பில் அழுத்தம் குறைவாக இருப்பதால் குடிநீர் குறைவாக வருவதாகவும், தெருவில் சி.சி.டி.வி கேமரா இல்லாத காரணத் தால் தெரு ஓரங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வாகனங்களில் பேட்டரிகள் திருடு போவதாகவும்.

பயன் பாடின்றி உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியில் குப்பைகள் அதிகமாக கொட்டுவதால் கூடுதல் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கவும், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வாகனத்தில் செல்லவும் இடையூறாக இருப்பதா கவும்.

இரவு நேரங்களில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும், டி.ஹெச்.ரோடு பகுதியில் அமைந்துள்ள சந்தில் கழிவு நீர் வசதி இல்லாமலும் சீரான சாலைகள் இல்லாமல் மேடு பள்ளங்களாக இருப்பதால் மாற்றுத் திறனா ளிகள் அவ்வழியை பயன்படுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும்

பொது பயன்பாட்டிற்காக கூடுதல் அடிபம்பு அமைத்து தர வேண்டியும் வீடுகளின் மேல்நிலைத்தொட்டிகளில் சுகாதாரம் கருதி மருந்துகள் அடிக்கவும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க கொசு மருந்து அடிக்கவும் மற்றும்சுமார் நூறு வருடங் களுக்கு மேலாக வசித்து வரும் வீட்டிற்கு பட்டா பெற்று
தர வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் சார்பாக கூறப்பட்டது.

மேலும் மைக்கில் பேச தயங்கியவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் தங்களின் குறைபாடு களையும் தேவையான பொது வசதிகளை கோரிக்கையாக எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டனர்.

பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்திற்கும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் உரிய விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவாக அவர்களின் தேவைகளையும் குறைபாடுகளையும் சரி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்கள்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.முடிவில் பொதுமக்கள் தரப்பில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து 12 -ஆவது வார்டில் பணியாற்றும் 60 தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தினமும் தனது சொந்த செலவில் காலை சிற்றுண்டி மதியம் சாப்பாடு வழங்கி வரும் கவுன்சிலர் கவி கணேசனை பொதுமக்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீடியா துறையினர் பாராட்டி னார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top