காமராஜர் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 47 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளதாக மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தெரிவித்தார்
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் நடப்பு நிதியாண்டில் சுமார் 47 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என துறைமுகத்தின் வேளாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 75 குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைமுக நிர்வாக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தேசியக் கொடியை பறக்க விட்டார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அருகாமையில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் ஐரீன் சிந்தியா பேசியது:
காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்டு தற்போது 25 ஆண்டு களை எட்டி வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது. இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி பல்வேறு மைல்கற்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு காரணமாக இருந்த துறைமுக அதிகாரிகள், தொழிலாளர்கள் பல்வேறு முனையங்களின் உரிமையாளர் கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் அனைவரும் பாராட் டுக்கு உரியவர்கள் இதே உணர்வுடன் தொடர்ந்து துறைமுகத் தை மென்மேலும் வளர்ச்சியடையச் தங்களைஅர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் (டிசம்பர் 2023 வரை) முந்தைய ஆண்டை விட சுமார் 2.58% அதிகரிப்புடன் 33.40 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த மாக 47 மில்லியன் டன் சரக்குகளை கையாள துறைமுக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு தொடர்புடைய அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார் ஐரீன் சிந்தியா.
நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துறைமுகப் பயனாளிகள், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்ற னர்.