வேங்கைவயல் சம்பவத்தில், 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப் பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
இதற்கான அனுமதி கோரும் மனுவை சிபி சிஐடி போலீஸார் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தனர். அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து வரும் பிப்.12 -ஆம் தேதிக்கு விசாரணை யை ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.