Close
நவம்பர் 21, 2024 11:14 மணி

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி முதல் அமர்வு நிறைவு சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி முதல் அமர்வு

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி முதல் அமர்வு நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் விழா புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:  புதுக்கோட்டையில் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் 5 ஸ்டார் நிதி குழுமமும் இணைந்து நடத்துகின்ற ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் முதல் அமர்வு நிறைவு பெற்றுள்ளது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் 15 நாட்கள் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. இத்திட்டத் தின் மூலம் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேன்மை அடைந்துள்ளது என்பது மாணவர்களுடைய பின்னூட்டத்தில் இருந்து தெளிவாக அறிய முடிகிறது. இரண்டாவது அமர்வில் புதுக்கோட்டை காமராஜபுரம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கிறார் கள் என்றார் ராஜ்குமார்.

புதுக்கோட்டை
விழாவில் பேசுகிறார், கவிஞர் தங்கம்மூர்த்தி

தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி  பேசுகையில், புதுக்கோட்டையில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் முதல் அமர்வு சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.

இத்திட்டத்தை புதுக்கோட்டையில் செயல்படுத்துகின்ற எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கண்டிப்பாக நல்ல பல பெரிய பதவிகளுக்கு செல்வார்கள்.

அப்பொழுது இந்த நல்ல நிலையை அடைய ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் முக்கிய காரணமாக இருந்தது என்று நினைவு கூறுவார்கள். இத்திட்டம் மாணவர் களின் அறிவியல், அறிவு, மற்றும் கேள்வி கேட்கும் மனப்பான் மையை விரிவடைய செய்துள்ளது கண்கூடாக தெரிகின்றது என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

நிகழ்வில் ஆசிரியர் மனசுத் திட்ட மாநில ஒருங்கிணைப் பாளர் சிகரம் சதீஷ் குமார் பேசுகையில்,  இத்திட்டத்தின் தொடக்க விழாவிலும் முதல் அமர்வு நிறைவு விழாவிலும் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

புதுக்கோட்டை
விழாவில் பங்கேற்று பேசிய மாணவி

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் பங்கேற் கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடம் போன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் மாணவர்களுடைய அனுபவ அறிவை மேம்படுத்தவும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் மாற மிக சிறந்த வாய்ப்பாக அமையும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  இத்திட்டத்தில் அதீத அக்கறை கொண்டுள்ளார். சென்னை, பூம்புகார் மற்றும் புதுக்கோட்டையில் இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர் களுடன்  பள்ளிக் கல்விதுறை அமைச்சர்  கலந்துரையாடும் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் சதீஷ்குமார்.

புதுக்கோட்டை
விழாவில் பரிசு பெற்ற மாணவர்

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வ.முருகையன் பேசியதாவது:  மாணவர்கள் தங்களுடைய தயக்கத்தை போக்கி பொது நிகழ்வுகளில் தைரியமாக பேச இந்நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமையும். இத்திட்டம் சிறப்பாக செயல்பட அனைத்து உதவிகளையும் கல்வித்துறை செய்து கொடுக்கும் என்றார்.

சென்னை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் ஜி.என்.ஹரிஹரன், பயோடெக்னாலஜி இயக்குனர் வி.ஆர்.பிரபாவதி ஆகியோர் காணொளி மூலம் மாணவர்களி டையே கலந்துரையாடி இத்திட்டத்தின் மூலம் புதிதாக என்னென்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை கேட்டு அறிந்தார்கள்.

புதுக்கோட்டை
காணொலியில் பங்கேற்ற மாணவர்கள்

இந்நிகழ்வில், ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.விக்டோரியா, காமராஜபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.வெள்ளைச்சாமி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் கே.சதாசிவம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் எம்.வீரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் மாணவர்கள் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” திட்டம் தங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டனர். விருந்தினர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் மீனா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top