புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் கங்கா புர்வாலா , சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன், ஆர்.சுரேஷ்குமார், வி.பவானி சுப்பராயன், ஆர்.விஜயகுமார், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரெகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கே. பூரண ஜெய ஆனந்த், மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனூர் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலையில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடி, ஆவுடையார்கோவில் மற்றும் விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் நிறுவப்படவும், உள்கட்டமைப்பு களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் திறந்து வைக்கப்படவும், புதுக்கோட்டை நீதிமன்றங்கள் செயல்படும் பாரம்பரியம் மிகுந்த கட்டிடங்கள் பாதுகாத்தல், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டப்படவும் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 03.02.2024 சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் தொடங்கவுள்ளது.
விழாவில்,புதுக்கோட்டை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வரவேற்புரையும், புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நன்றியுரையாற்றவும் உள்ளார்கள்.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் கே.பி. சத்யமூர்த்தி திட்ட அறிக்கை சமர்ப்பிப்பார். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனுார், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கே.
பூரண ஜெய ஆனந்த் தெரிவித்துள்ளார்.