Close
நவம்பர் 22, 2024 12:44 காலை

மணலி ஏரியை ரூ.4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடக்கம்

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ 4.65 கோடி செலவில் மணலி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் மாதவரம் எஸ் சுதர்சனம். உடன் மண்டல குழு தலைவர் ஏவி ஆறுமுகம், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளனர் .

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 சென்னை மாநகராட்சி 20 வது வார்டுக்கு உட்பட்ட மணலி மாத்தூர் இடையே சுமார் 32 ஏக்கர் பரப்பளவில் மணலி ஏரி அமைந்துள்ளது. இதன் அருகாமையில் மாத்தூர் ஏரியும் உள்ளது. இரண்டு ஏரிகளும் வடசென்னை பகுதியில் முக்கிய நீர் ஆதாரங்களாக ஒரு காலத்தில் இருந்து வந்தன.
காலப்போக்கில் இந்த ஏரிகள் படிப்படியாக தூர்ந்து போனதால் மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரிகள் தூர்வாரப்பட்டன. ஆனாலும் ஆகாயத்தாமரைகள் மீண்டும் வளர்ந்து முற்றிலுமாக ஏரி சீர்கேட்டிற்கு உள்ளானது.
இதனால் அண்மையில் பெய்த கனமழையில் கூட ஏரியில் வெள்ள நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வந்தனர்.
எனவே  சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 4.65 கோடி செலவில் மணலி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தொடங்கி வைத்தார்.
இந்த ஏரி தூர்வார் வருவதோடு நான்கு புறமும் அகலமான கரைகளை அமைத்து நடைபாதை பூங்காக்கள், பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள், நடைப்பயிற்சி வளாகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் சுமார் 10 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர்கள் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி சண்முகம், சந்திரன் கீர்த்தி உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top