Close
ஜூலை 7, 2024 10:16 காலை

எண்ணூரில் தனியார் உரத் தொழிற் சாலையை மூடக்கோரி சாலை மறியல்,கடையடைப்பு

சென்னை

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவுக்கு காரணமான தனியார் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம்

சென்னை எண்ணூரில் கோரமண் டல் தனியார் தொழிற்சா லையை நிரந்தரமாக மூடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
எண்ணூரில் உள்ள கோரமண்டல் தனியார் உர தொழிற் சாலையில் கடந்த டிசம்பர் மாதம் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால்  எண்ணூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற் காலிக மாக மூட உத்தரவிட்டுள்ளது. உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 42 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடுபவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வியாபாரி கள் சங்கம், எண்ணூரில் உள்ள 33 கிராம மற்றும் குடியிருப் போர் நல சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை
மணலியில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டம்
இன்று 42 -ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கு எண்ணூரில் 33 கிராமங்களில் உள்ள  அனைத்து வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்து செவ்வாய்க் கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற கடையடைப்பை தொடர்ந்து  அந்த பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சுமார் 500 கடைகளும் மற்றும் எண்ணூரில் உள்ள அனைத்து மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் டுகளும் இன்று இயங்க வில்லை. போராட்டம் நடைபெற்றதையொட்டி எண்ணூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top