கடந்த 86 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானை சேர்ந்த MCTM. சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை நிறுவினார்..
முதன்முதலில் காரைக்குடி மற்றும் பர்மாவில் உள்ள ரங்கூனில் இரு கிளைகளுடன் தொடங்கப்பட்ட இவ்வங்கி மென்மேலும் வளர்ந்து இன்றைக்கு பல நூறு கிளைகளை கொண்டுள்ளது..
MCTM சிதம்பரம் செட்டியார் அவர்கள் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியையும் கேரளாவில் திருவாங்கூர் ரேயான்ஸ் நிறுவனத்தையும் நிறுவியவர்.
சென்னையில் ஒரு காலத்தில் சென்னையின் உயரமான கட்டிடமாக விளங்கிய அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தை வடிவமைத்து கட்டத் தொடங்கியவர், பின்னர் நாட்டுடையமாக்கப்பட்டதால் அரசிடம் சென்றது..
10.2.2024 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவப்பட்ட நிறுவனர் நாள் ஆகும்.திருவாங்கூர் ரேயான்ஸ் நிறுவனத்திலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் காரைக்குடி பகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த MCTM சிதம்பரம் செட்டியார் அவர்களை நினைத்து போற்றுவோம்…